Home › Ringtones › Kanda Shashti Kavacham - Mambalam Sisters

Kanda Shashti Kavacham - Mambalam Sisters

free ringtone for iPhone & Android phones

@Milla
85
29 Sec
Top 100 Call of Duty Ringtones
Top 100 Fortnite Ringtones
Top 100 Free Fire Ringtones

Similar ringtones:

30
@Ada
476
கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி வினாயக ஜெயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்தென்னை ரக்ஷித்திடுவீரே ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குஹா சரணம் சரணம் குருகுகா சரணம் குருபரா சரணம் சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம் தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் அவதூத ஸத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர் அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய் தந்திடுவாய் வரமதனை ஸ்கந்த குருநாதா ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்த குருநாதா போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி போற்றி போற்றி முருகா போற்றி அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் தகப்பன் சாமியே என் இதயத்துள் தங்கிடுவாய் ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய் சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம் திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண அகத்துள்ளே குமரா நீ அன்புமயமாய் வருவாய் அமரத் தன்மையினை அனுக்ரஹித் திடுவாயே வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய் வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே திருமுருகன் பூண்டியிலே திவ்யஜோதியான கந்தா பரஞ்ஜோதியுங் காட்டி பரிபூர்ணம் ஆக்கிடுவாய் திருமலை முருகா நீ திடஞானம் அருள்புரிவாய் செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் அடிமுடி அறியவொணா அண்ணா மலையோனே அருணாசலக் குமரா அருணகிரிக் கருளியவா திருப்பரங்கிரி குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும் திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய் எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய் எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே எங்கும் நிறைந்த கந்தா என்கண் முருகா நீ என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய் திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய் திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய் செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும் சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர் பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் அருள்வீரே வெண்ணை மலைமுருகா மெய்வீட்டைத் தந்திடுவீர் கதிர்க்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய் காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர் மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர் குமரமலை குருநாதா கவலையெல்லாம் போக்கிடுவீர் வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர் வடபழனி ஆண்டனே வல்வினைகள் போக்கிடுவீர் ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் ஏழ்மை அகற்றி கந்தா எமபயம் போக்கிடுவீர் அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய் அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய் பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாய் படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பே தான் உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய் அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய் அன்பை உளத்திலே அசையாது அமர்த்திடுமோர் சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும் வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கு மானோய் நீ உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே சிவசக்திக் குமரா சரணம் சரணமையா அபாயம் தவிர்த்து தடுத்தாட் கொண்டருள்வாய் நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர் உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய் யானெனதற்ற மெய் ஞானமது அருள்வாய் நீ முக்திக்கு வித்தான முருகா கந்தா சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய் தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய் சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய் பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ அடியனைக் காத்திட அருவாய் வந்தருள்வாய் உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா தேவாதி தேவா சிவகுரோ வா வா வா வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய் வேதச் சுடரோய் மெய்கண்ட தெய்வமே மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய் அபயம் அபயம் கந்தா அபயமென்று அலறுகிறேன் அமைதியை வேண்டி அறுமுகா வா வாவென்றேன் உன் துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள் அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய் வேண்டியது உன்னருளே அருள்வது உன் கடனேயாம் உன் அருளாலே உன் தாள் வணங்கிட்டேன் அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு அருள்ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு அறிவை அறிந்திடும் அவ்வருளை நீ தந்துவிடு அனுக்ரஹித் திடுவாய் ஆதிகுரு நாதா கேள் ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து நல்லதும் கெட்டதும் நானென்பதும் மறந்து பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் அருள்வெளி விட்டிவனை அகலாது இருத்திடுவாய் அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய் சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் சிவனைப் போலென்னைச் செய்திடுவதுன் கடனே சிவசத் குருநாதா சிவசத் குருநாதா ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய் தாளினைப் பிடித்தேன் தந்திடு வரமெனக்கு திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் சத்ரு பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு கிழக்குத் திசையிருந்து க்ருபாகரா காப்பாற்றும் தென்கிழக்குத் திசையிருந்து தீனபந்தோ காப்பாற்றும் தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும் தென்மேற்கிலும் என்னைத் திறல்வேலால் காப்பாற்றும் மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய் வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய் வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய் வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே பத்துதிக்குத் தோறுமெனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய் நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும் புருவங்களுக் கிடையே புருஷோத்தமன் காக்கட்டும் கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும் நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும் கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும் உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும் நாக்கை நன்முருகன் நயமுடன் காக்கட்டும் பற்களைக் கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் கழுத்தைக் ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும் தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும் கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும் மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும் மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும் உதரத்தை எல்லாம் உமைமைந்தன் காக்கட்டும் நாபி குஹ்ய லிங்கம் நவயுடைக் குதத்தோடு இடுப்பை முழங்காலை இணையான கால்களையும் புறங்கால் விரல்களையும் பொருந்தும் முகர் அனைத்தையுமே உரோமத் துவாரமெலாம் உமைபாலா ரக்ஷிப்பாய் தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்ஸமென்பு மேதஸையும் அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர் என் அஹங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும் முருகா வெனைக்காக்க வேல் கொண்டு வந்திடுவீர் பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும் க்லௌம் ஸௌம் நமஹவென்று சேர்த்திடடா நாள்தோறும் ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ஒரு மனத்தோடு நீ உருவையும் ஏத்திடடா முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால் மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம் முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம் முருகன் இருப்பிடமே முக்தித்தலம் ஆகுமப்பா ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான் ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே மூலத்தை நீ ஜயித்தே முக்தனுமாகிடடா அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்திடில் எண்ணியதெலாம் கிட்டும் எமபயம் அகன்றோடும் மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும் பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே வேத சூக்குமத்தை விரைவாகப் பற்றிடலாம் சுப்ரஹ்மண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான் அருட்பெருஞ் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான் நின்னையே நான்வேண்டி நித்தமும் ஏத்துகிறேன் மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ பகுத்தறிவோடு இவனைப் பார்த்திடச் செய்திடப்பா பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான் பழனியில் நீயும் பழம் ஜோதியானாய் நீ பிரம்மனுக் கருளியவா ப்ரணவப் பொருளோனே பிறவா வரமருளி ப்ரம்மமயம் ஆக்கிடுவாய் திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் பழமுதிர் சோலையில் பரஞ்ஜோதி மயமானாய் ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக்கு அருளிய நீ குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய் ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கி கொண்டனையே ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய் பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய் தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய் எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே சரவண பவனே சரவண பவனே உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன் உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா என்னிலுன்னைக் காண எனக்கு வரமருள்வாய் சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய் இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான் இந்திரியமடக்கி இருந்தும் அறிகிலேன் நான் மனதை அடக்க வழியொன்றும் அறிந்திலேன் நான் ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம் காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய் சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய் நினைப்பெலாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய் திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய் நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில் நித்யானந்தமே நின்னுரு வாகையினால் அத்வை ஆனந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள் ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள் மெய்ப்பொருள் காட்டி மேன்மை அடைந்திடச்செய் வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய் தாரித் திரியங்களையுன் தடிகொண்டு விரட்டிடுவாய் துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய் பாப உடலைப் பரிசுத்தம் ஆக்கிடுவாய் இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய் ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய் அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய் கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே ஆறுமுகமான குரோ அறிந்திட்டேனுன் மஹிமை இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ அன்புத் தெய்வமே ஆறுமுகம் ஆனவனே சுப்ரஹ்மண்யனே சோகம் அகற்றிடுவாய் ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதன் ஆக்கிடுவாய் அகந்தையெலாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய் அன்புமயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய் எல்லையில்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய் அன்பே சிவமும் அன்பே சக்தியும் அன்பே ஹரியும் அன்பே பிரமனும் அன்பே தேவரும் அன்பே மனிதரும் அன்பே நீயும் அன்பே நானும் அன்பே சத்தியம் அன்பே நித்தியம் அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் அன்பே மௌனம் அன்பே மோக்ஷம் அன்பே ப்ரமமும் அன்பே அனைத்துமென்றாய் அன்பிலாத இடம் அங்குமிங்கு இல்லையென்றாய் எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்த குருவானான் காண் மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே ஸ்கந்தாஸ்ரமந் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய் ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு எல்லையில்லாத உன் இறைவெளிக் காட்டிடுவாய் முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே நம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன் நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் விட்டிட மாட்டேன் கந்தா வீடதருள்வீரே நடுனெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன் ப்ரம்ம மந்திரத்தைப் போதித்து வந்திடுவாய் சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய் சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும் மெய்யடியராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும் கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ கொல்லிமலை மேலே குமரகுருவானவனே கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா கருவூரார் போற்றும் காங்கேயா ஸ்கந்தகுரோ மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே சிவவாக்கிய சித்தருனைச் சிவன் மலையில் போற்றுவரே பழனியில் போகருமே பாரோர் வாழப் ப்ரதிஷ்டித்தான் புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா கள்ளம் கபடமற்ற வெள்ளையுள்ளம் அருள்வீரே கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ள இடம் ஸ்கந்தகிரி என்பதை நான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும் பக்தர்களும் போற்றும் பழிநிமலை முருகா கேள் கொங்குதேசத்திலே குன்றுதோறும் குடிகொண்டோய் சீலம் நிறைந்த சேலம் மாநகரத்தில் கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில் ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய் அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமூலம் ஆனகுரோ அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய் சுகவனே சன்மகனே சுப்ரமண்ய ஜோதியே பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய் மால்மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன் ஜோதிப் பிழம்பான சுந்தரனே பழனியப்பா சிவஞானப் பழமான ஸ்கந்த குருநாதா பழம்நீ என்றதினால் பழனிமலை இருந்தாயோ? திருவாவினன்குடியில் திருமுருகனானாயோ? குமரா முருகா குருகுகா வேலவனே அகத்தியர்க்கு தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான் ஔவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய் போகருக்கு அருள் செய்த புவன சுந்தரனே தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதியானவனே கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன் நாமம் உனையன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன் கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே கந்தனென்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும் புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை திருவடியை நம்பினேன் திருவடி சாக்ஷியாக புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள் நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும் நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின் நாமம் முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன் உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் அங்கிங்கெனாதபடி எங்குமே முருகனப்பா முருகன் இலாவிட்டால் முவ்வுலகம் ஏதப்பா? அப்பப்பா முருகனின் அருளே உலகமப்பா அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன் ஸ்தாவர ஜங்கமமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச் சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர் சத்தியம் சொல்கின்றேன் சந்தேகம் இல்லையப்பா வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய் சத்தியமான தெய்வம் ஸ்கந்த குருநாதன் சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக் கந்தகுரு கவசமோதி கந்தகிரி ஏறிவிட்டால் முந்தை வினையெல்லாம் கந்தன் அகற்றிடுவன் நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும் கன்னிமார் ஓடைநீரை கைகளில் நீ எடுத்துக் கந்தனென்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேத்தி உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் சித்தமலம் அகன்று சித்தசுத்தியும் கொடுக்கும் கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதை பாராயணம் செய்துலகில் பாக்யமெலாம் பெற்றிடுவீர்
30
@Karoline
129
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலனருள் கந்த சஷ்டி கவசம் தனை அமரரிடர் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணி சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணி சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மைய நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா வெண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக ரகண பவச ர ர ர ர ர ர ர ரிகண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விநபவ சரகண வீரா நமோநம நிபவ சரகண நிறநிற நிறென ரகண பவச ர ர ர ர ர ர ர ரிகண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விநபவ சரகண வீரா நமோநம நிபவ சரகண நிறநிற நிறென வசுர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும் உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும் கிலியும் சௌவும் கிளரொளி யையும் நிலைபெற்றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக! ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி றுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து எந்தனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோ தனென் எந்தனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோ தனென் உன் திருவடியை உறுதியென் றெண்ணும் எந்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியை புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி இரண்டும் வேலவர் காக்க நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை ரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை ரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதினாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுற செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வடிவேல் காக்க பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை இரண்டும் முரண்வேல் காக்க பின்கை இரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பக ரன்னில் வஜ்ஜிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையற தாக்கத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோடனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட ஆனை அடியினில் அரும்பாவைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலதூதா ளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோட படியினில் முட்ட பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கைகால் முறிய கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடு விடு வேலை வெகுண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் எனை தொடர்ந்தோட தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்பு பித்தம் சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருஅரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீ எனக் கருள்வாய் ஈரேழு உலகமும் எனக் குறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்திரு நாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தனிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா திருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவச மாக ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணிய பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னரு ளாக அன்புடன் ரஷி அன்னமுஞ் சொன்னமும் மெத்த மெத்தாக வேலா யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செய்தால் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேசமுடன் ஒரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்துநீ றணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த் திசைமன்ன ரென்மர் செயல்து ருளுவர் மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார் கந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்ரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில் வீரலட்சுமிக்கு விருந்துணவாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு வந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி! எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி! தேவர்கள் சேனா பதியே போற்றி! குறமகள் மனமகிழ் கோவே போற்றி! திறமிகு திவ்விய தேகா போற்றி! இடும்பா யுதனே இடும்பா போற்றி! கடம்பா போற்றி கந்தா போற்றி! வெற்றி புனையும் வேலே போற்றி! உயர்கிரி கனக சபைக்கோ ரரசே! மயில்நட மிடுவோய் மலரடி சரணம்! சரணம் சரணம் சரவண பவ ஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்! சரணம் சரணம் சண்முகா சரணம்!
MORE...[+]
Top 100 Civilization VI Ringtones
Top 100 Bollywood Ringtones
Top 100 Among Us Ringtones
Top 100 Roblox Ringtones
Top 100 One Piece Ringtones

Users also like:

MORE...[+]

Set Kanda Shashti Kavacham - Mambalam Sisters ringtone on an Android Phone:

1. Select Download Ringtone button above.
2. Go to Settings app.
3. Select Sounds & Vibration.
4. Select Phone ringtone.
5. Select Ringtone from Internal Storage.
6. Click the Apply button.
So after only a few basic steps, you have successfully done the default ringtone on your phone running Android operating system with the pop songs you want.



Set Kanda Shashti Kavacham - Mambalam Sisters ringtone for your iPhone:

1. Select Download M4R for iPhone button above and save to your PC or Mac.
2. Connect your iPhone to your PC or Mac via its charging cable.
3. Launch iTunes and drag the .m4r to the Tones folder (Under "On My Device").
Hopefully, the guides for configuring ringtones for iPhones and Android phones will make it simple for you to replace the uninteresting default sounds on your phone with your own personal favorites.



Browse 5,000,000+ free ringtones by categories:

Thanks for letting us know
Your feedback is important in helping us keep the 1Ringtone community safe.
Close

X

#1 Ringtone App - top ringtones for free!

logo
Login with Google Login with Facebook

By joining, you agree to Terms of Service & Privacy Policy.

Upload a ringtone

You can upload MP3, WAV, M4A, OGG, M4R, ACC format files.

By selecting 'Upload' you are representing that this item is not obscene and does not otherwise violate Terms of Service, and that you own all copyrights to this item or have express permission from the copyright owner(s) to upload it.

Before uploading, please read our Privacy.